மத்திய கிழக்கில் முழுமையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் ஈரானிடம் உள்ளன - அமெரிக்க உளவுத்துறை
ஈரானிடம் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 50 சதவீத ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன்கள் இன்னும் உள்ளன என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 470 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள்
மத்திய கிழக்கில் போரின் தொடக்கத்தில் ஈரானிடம் சுமார் 470 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் இருந்ததாக இஸ்ரேல் மதிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவற்றில் சுமார் 60 சதவீதத்தை அழித்துவிட்டதாக அல்லது செயலிழக்க செய்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது.
இந்த நிலையில்தான் வியாழக்கிழமையன்று, இஸ்ரேல் ஈரானிய ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளானது. குறிப்பாக, மத்திய இஸ்ரேலில் 9 இடங்களில் தாக்குதல் ஏற்பட்டது.
அதன் பின்னர் மற்றொரு தாக்குதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. ஆனால், உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
ஆயிரக்கணக்கான ட்ரோன் விமானங்கள்
இந்த சூழலில் பல வாரங்களாக குண்டுவீச்சு நடந்தபோதிலும், ஈரான் தனது 50 சதவீத ஏவுகணை ஏவுதளங்களையும், ஆயிரக்கணக்கான ட்ரோன் விமானங்களையும் இன்னும் வைத்திருக்கிறது.

மேலும், அதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதும் "முழுமையான பேரழிவை" ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
தனது பாதி ஏவுகணை ஏவுதளங்களையும், ஆயிரக்கணக்கான ட்ரோன் விமானங்களையும் ஈரான் இன்னும் சேதமடையாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகள் வேறு இடங்களில் கவனம் செலுத்துவதால், இவை தப்பிப் பிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |