கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா
அமெரிக்கா தனது அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோவுக்கு 4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ்களை விநியோகம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமேரிக்கா நேரடியாக மற்றோரு நாட்டுக்கு தடுப்பூசிகளை வழங்குவது இதுவே முதல் முறையாகும். சீனா அதன் உள்நாட்டு கொரோனா தடுப்பூசிகளை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தீவிரம் காட்டிவரும் நிலையில், அமெரிக்கா இதனை முன்னெடுத்துள்ளது.
கனடாவும் மெக்ஸிகோவும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பிருப்புசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளன. ஆனால் அமெரிக்கா ஃபைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய மருந்துகளுக்கு மட்டுமே அங்கீகாரம் அளித்துள்ளது.
இருப்பினும், இந்த தடுப்பூசியின் கையிருப்பு அமெரிக்காவில் உள்ளது. அதனால், அதில் சில டோஸ்களை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கையிருப்பில் உள்ள 7 மில்லயன் அஸ்ட்ராஜெனேகா டோஸ்களில் 2.5 மில்லியன் மெக்ஸிகோவிற்கும், 1.5 மில்லியன் கனடாவுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் எந்தவொரு கூடுதல் தடுப்பூசிகளையம் அமெரிக்காவிற்கு திருப்பி கொடுத்துவிட வேண்டும்.