மாணவனுக்கு நிர்வாண வீடியோ அனுப்பிய ஆசிரியை : பாடசாலை எடுத்த அதிரடி முடிவு!
அமெரிக்காவில் 16 வயதுடைய மாணவருக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பிய ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியை
அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிக்கி லின் லாப்லின் என்பவர் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் உள்ள 16 வயதுடைய ஒரு மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, சிறுவனையும் அனுப்புமாறு கேட்டுள்ளார். இந்த சம்பவமானது பாடசாலை முழழுவதும் தீயாக பரவியுள்ளது.
Daily Mail
இது தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் மாணவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிரியை தனக்கு அவரது நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியதாகவும், ஆசிரியையிடம் தனது நிர்வாண படங்களை பரிமாறி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின் ஆசிரியை விசாரணை செய்யும் போது, மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த மாணவன் மைனர் என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த ஆசிரியை ஏற்கனவே திருமணமாகி இருப்பதாகவும் இவருக்கும் ஒரு வயதில் குழந்தை இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது கற்பழிப்பு முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |