ரஷ்யா தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால்... அமெரிக்கா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்குள் புகுந்த ரஷ்யா எட்டு நாட்களாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு விதமான தடைகளையும் விதித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட புதிய பொருளாதார தடைகள் தொடர்பில் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலாளர் விக்டோரியா நுலாண்ட் பேசியுள்ளார்.
விக்டோரியா நுலாண்ட் கூறுகையில், உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தும் பட்சத்தில் ரஷ்யாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் புதிய பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.