சுவிஸ் நாட்டவர்கள் மூன்று பேர் அமெரிக்காவில் கைது
சுவிஸ் நாட்டவர்கள் மூன்று பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுவிஸ் நாட்டவர்கள் மூவர் அமெரிக்காவில் கைது
அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரும் தங்கள் விசாக்காலம் முடிவடைந்தபின்பும் அங்கு தங்கியிருந்ததற்காக அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டவர்கள் மூன்று பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சம்பவம் தங்களுக்குத் தெரியும் என சுவிஸ் ஃபெடரல் வெளி விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Keystone-SDA
அமெரிக்காவைப் பொருத்தவரை, சுவிட்சர்லாந்து மற்றும் 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் விசா அல்லது பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பின் கீழ் (Electronic System for Travel Authorisation) அமெரிக்காவில் 980 நாட்கள் தங்கியிருக்கலாம்.
ஆனால், அவர்களுடைய விசா அல்லது பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு காலாவதியானபின்பும் அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் மீது, நாடுகடத்தல் வரையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |