ரகசியமாக பிறந்த ட்வின்ஸ்! தந்தையர் தினத்தில் ஷாக் கொடுத்த உசைன் போல்ட்
உசைன் போல்ட் தனக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
'மின்னல் வேக மனிதன்' என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட்டுக்கும் அவருடைய காதலி கேசி பென்னட்டுக்கும் குழந்தை பிறந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜமைக்கா நாட்டின் பிரதமர் Andrew Holness தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கள் நாட்டின் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் - கேசி பென்னட் இணையருக்கு பெண் குழந்தைப் பிறந்துள்ளது என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால் இது குறித்து உசைனிடமிருந்து அதிகாரப்பூரவ அறிக்கை ஏதும் வெளிவராமல் இருந்தது.
Olympia Lightning Bolt ⚡️
— Usain St. Leo Bolt (@usainbolt) June 20, 2021
Saint Leo Bolt ⚡️
Thunder Bolt ⚡️@kasi__b pic.twitter.com/Jck41B8j3J
இந்த நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு தனது காதலி, முதல் குழ்நதை மற்றும் தற்போது பிறந்துள்ள இரட்டை பெண் குழந்தைகளுடன் ஒரு அழகான குடும்ப புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
மேலும், இரட்டையருக்கு செயின்ட் லியோ போல்ட் (Saint Leo Bolt) மற்றும் தண்டர் போல்ட் (Thunder Bolt) என பெயரிட்டுள்ளார்.
உசைன் போல்ட் - கேசி பென்னட் இணையரின் முதல் குழந்தியின் பெயர் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் (Olymoia Lightning Bolt) என்பது குறிப்பிடத்தக்கது. போல்ட் குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.