2026-ஆம் ஆண்டுக்கான H-1B விசா பதிவு அறிவிப்பு-முக்கிய விவரங்கள் மற்றும் செயல்முறை
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) 2026-ஆம் நிதியாண்டிற்கான H-1B விசா பதிவு காலத்தை அறிவித்துள்ளது.
மார்ச் 7, 2025 (IST இரவு 10:30) முதல் மார்ச் 24, 2025 (IST இரவு 10:30) வரை விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்.
H-1B பதிவு செய்வது எப்படி?
1. USCIS ஓன்லைன் கணக்கு உருவாக்குதல்
-நிறுவனங்கள் மற்றும் சட்டப் பிரதிநிதிகள் USCIS வலைதளத்தில் organization account உருவாக்க வேண்டும்.
2. மின்னணு பதிவு (Electronic Registration) செய்யுதல்
- ஒவ்வொரு பயனாளருக்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.
3. பதிவு கட்டணம் செலுத்துதல்
- FY 2026 H-1B விசா பதிவு கட்டணம் $215 (INR 18,650) ஆகும்.
தேர்வு செயல்முறை
- பதிவு முடிந்த பிறகு தான் தேர்வு செயல்முறை தொடங்கும், அதனால் முதல்நாளில் பதிவு செய்ய அவசரப்பட வேண்டாம்.
- மார்ச் 31, 2025-க்குள் USCIS தேர்வு முடிவுகளை அறிவிக்கும்.
- தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டுமே H-1B விண்ணப்பத்தை தொடர முடியும்.
H-1B விசா தொழில்நுட்பம், மருத்துவம், நிதி போன்ற துறைகளில் திறமைமிக்க வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முக்கிய வாய்ப்பாகும்.
எனவே, நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராகி, USCIS கணக்கு உருவாக்கி, தேவையான ஆவணங்களைச் சேகரிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு USCIS அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். https://www.uscis.gov/
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
2026 H-1B visa registration