ஒரே மாதிரியான லொட்டரி சீட்டை வாங்கி கோடிகளை குவித்த தம்பதியினர்! அடித்தது அதிர்ஷ்டம்
ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான 2 லொட்டரி சீட்டுகளை தேர்வு செய்து தம்பதியினர் வாங்கியுள்ளனர்.
தம்பதிகளுக்கு அடித்த ஜாக்பாட்
அமெரிக்காவில் மேரிலாண்டில் உள்ள அனபோலிஸ் நகரில் வசிக்கும் ஒரு தம்பதியினர் பவர்பால் (Powerball) குலுக்கலில் பங்கேற்றனர். அவர்கள், ஒருவருக்கொருவர் தெரியாமல் ஒரே மாதிரியான லொட்டரி சீட்டுகளை தேர்வு செய்து வாங்கியுள்ளனர்.
பின்னர், நடத்தப்பட்ட குலுக்கலில் தம்பதியினர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 1 மில்லியன் டொலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அதன்படி இருவருக்கும் தலா 1 மில்லியன் டொலர் பரிசு என்றதன் அடிப்படையில் 2 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.17 கோடி) பரிசு கிடைத்துள்ளது.

எம்.ஜி.ஆரிடம் மாத சம்பளம் பெற்று அவருக்கே முதலாளியாகும் அளவுக்கு உயர்ந்தவர்! யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
இதில், கணவர் வாங்கிய லொட்டரிக்கு தான் முதலில் பரிசுத்தொகை கிடைத்துள்ளது என்று நினைத்துள்ளனர். ஆனால், அடுத்து மனைவி வாங்கிய லொட்டரி சீட்டும் ஒரே மாதிரி இருந்ததால் அவர்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் அடித்தது.
தற்போது, தம்பதியினருக்கு இரட்டிப்பாக கிடைத்த பரிசுத் தொகையை சிறப்பான வருவாய் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |