விம்பிள்டன் எச்சரிக்கை... தியான அறையை உடல் தேவைகளுக்காக பயன்படுத்த வேண்டாம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், போட்டிகளை காணவரும் ரசிகர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை நிர்வாகம் விடுத்துள்ளது.
ரசிகர்களின் வசதிக்காக அமைதி அறை
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக அமைதி அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அறையில் தியானம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக ரசிகர்கள் இளைப்பாறலாம்.
ஆனால், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை காண வந்த ஜோடி ஒன்று தியான அறைக்கு சென்று உடல் தேவையை பூர்த்தி செய்துள்ளது. இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Credit: wimbledon
இந்த விவகாரம் தொடர்பில் பார்வையாளர்கள் சிலர் சாட்சியமும் அளித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடர்புடைய அறையை தியானத்திற்கு அல்லது இறை வணக்கம் செலுத்த, குழந்தைகளுக்கு பாலூட்டவும் பயன்படுத்தலாம் என அறிவித்திருந்தனர்.
தற்போதும் அந்த அறையை ரசிகர்கள் பயன்படுத்த தடை இல்லை எனவும், ஆனால் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |