விளாடிமிர் புடினை கொல்ல உக்ரைன் அனுப்பிய விமானம்: அம்பலப்படுத்திய ஜேர்மன் ஊடகம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய உக்ரைன் உளவுத்துறை அனுப்பிய ட்ரோன் விமானம் பாதி வழியில் விபத்துக்குள்ளானதாக ஜேர்மன் ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
புடினை படுகொலை செய்ய
உக்ரைன் உளவுத்துறை 17 கிலோ வெடிப்பொருட்களுடன் UJ-22 ரக ட்ரோன் விமானத்தை கடந்த ஞாயிறன்று அனுப்பியுள்ளது. மாஸ்கோ அருகே புதிதாக கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ள ரஷ்யாவின் தொழிற்பேட்டைக்கு புடின் வருகை தர இருப்பதாக தகவல் வெளியானது.
Credit:dailymail
இந்த நிலையிலேயே உக்ரைன் தரப்பு புடினை படுகொலை செய்யும் நோக்கத்துடன் ட்ரோன் விமானத்தை அனுப்பியுள்ளது. ஆனால் தொடர்புடைய தொழிற்பேட்டையை நெருங்கும் முன்னரே, அந்த ட்ரோன் விபத்தில் சிக்கியதாக ஜேர்மன் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த தொழிற்பேட்டைக்கு புடின் வருகை உறுதி செய்த நிலையிலேயே உக்ரைன் உளவுத்துறை ட்ரோன் விமானத்தை அனுப்பியுள்ளது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அந்த ட்ரோன் Voroskogo கிராமத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு வட்டத்தில் சிக்காமல், உரிய இலக்கை நெருங்கிய நிலையிலேயே அந்த ட்ரோன் விபத்தில் சிக்கியதாக கூறுகின்றனர்.
Credit:dailymail
UJ-22 ரக ட்ரோன் விமானம்
இருப்பினும், ஜேர்மன் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த தகவலை உக்ரைன் நிர்வாகம் இதுவரை உறுதி செய்யவில்லை. UJ-22 ரக ட்ரோன் விமானமானது 500 மைல்கள் வரையில் பறந்து செல்லக் கூடியது.
மேலும், அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் 30 C4 பிளாஸ்டிக் வெடிப்பொருட்கள் 17 கிலோ அளவுக்கு பொருத்தியிருந்தனர். ஞாயிறன்று அந்த தொழிற்பேட்டைக்கு வருகை தர இருப்பதாக விளாடிமிர் புடின் அறிவித்திருந்தாலும், நேரம் குறிப்பிடவில்லை என்றே கூறப்படுகிறது.
Credit:dailymail