அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல்
அமெரிக்க சோளம் வாங்குவதில் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தால், அமெரிக்க சந்தைகளில் அவர்கள் வணிகம் செய்ய முடியாமல் போகும் என வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அடுத்த மிரட்டல் விடுத்துள்ளார்.
தங்களுக்கு சாதகமாக
இந்தியா வரிகளை குறைக்க மறுத்தால் கடும் பின்னடைவை எதிர்கொள்ள நேரிடும். இந்தியா மீதான கோபத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமாகவே குறைத்து வருகிறார்.
இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தகம் முன்னெடுப்பதுடன், அனைத்து வாய்ப்புகளையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. 1.4 பில்லியன் மக்கள் கொண்ட நாடு என கூறிக்கொள்ளும் இந்தியா, ஏன் அமெரிக்க சோளம் வாங்குவதில் தயங்குகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா உங்களை நடத்துவது போல, நீங்களும் வரிகளை குறைத்து அமெரிக்காவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றே ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் விளையும் சோளம் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்டதாகும், இந்தியா மரபணு மாற்றப்பட்ட சோளத்தைப் பயன்படுத்துவதில்லை.
இந்தியா நிதியுதவி
இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கி வந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் ட்ரம்ப் இந்தியா மீது வரிகளை விதித்தார்.
கடந்த சில வாரங்களாக, ட்ரம்பும் அவரது உயர் அதிகாரிகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை விமர்சித்து வருகின்றனர், மேலும் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் அந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |