36 பந்தில் சதம்! வாணவேடிக்கையால் அதிர்ந்த மைதானம்..மிரட்டல் வீரரின் வீடியோ
PSL தொடரில் முல்தான் வீரர் உஸ்மான் கான் 36 பந்துகளில் சதம் விளாசி மிரள வைத்தார்.
உஸ்மான் கான் ருத்ர தாண்டவம்
பாகிஸ்தான் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முல்தான் சுல்தான் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குவெட்டா அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முல்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் உஸ்மான் கான் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே சரவெடியாய் வெடித்த உஸ்மான், பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.
SHOT, YAAR! #HBLPSL8 | #SabSitarayHumaray | #QGvMS pic.twitter.com/uhz1MFdJ94
— PakistanSuperLeague (@thePSLt20) March 11, 2023
ஒரே ஓவரில் 27 ஓட்டங்கள்
குறிப்பாக, கியாஸ் அகமது வீசிய இரண்டு ஓவர்களை பதம் பார்த்த உஸ்மான், அவரது ஓவர்களில் மட்டும் 54 ஓட்டங்களை விளாசினார். மேலும் 36 பந்துகளில் சதம் அடித்தார். மறுமுனையில் குறைந்த பந்துகளை மட்டுமே ரிஸ்வான் எதிர்கொண்டார்.
WHAT. AN. OVER. FOR. @MultanSultans ?#HBLPSL8 | #SabSitarayHumaray | #QGvMS pic.twitter.com/XkaGaSjIIs
— PakistanSuperLeague (@thePSLt20) March 11, 2023
எனினும் இவர்களது பார்ட்னர்ஷிப் 150 ஓட்டங்களை கடந்தது. மொத்தம் 43 பந்துகளை எதிர்கொண்ட உஸ்மான் 120 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 9 சிக்ஸர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
??#HBLPSL8 | #SabSitarayHumaray | #QGvMS pic.twitter.com/ml44LJTbei
— PakistanSuperLeague (@thePSLt20) March 11, 2023