பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்! உங்கள் மகள்கள் பயங்கரவாதிகள்.. அவுஸ்திரேலிய வீரருக்கு மிரட்டல்
அவுஸ்திரேலியாவில் போண்டி பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
வெறுப்புணர்வு
போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி மற்றும் மகள்கள் இணையத்தில் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உஸ்மான் கவாஜாவின் மகள்கள் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
மேலும், அவர்கள் 'எதிர்காலப் பள்ளித் தாக்குதல்தாரிகள் ' மற்றும் 'புற்றுநோய் போன்ற பயங்கரவாத இரத்தம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு 'திரும்பிச் செல்லுங்கள்'
அத்துடன் உஸ்மான் கவாஜாவும், அவரது குடும்பத்தினரும் பாகிஸ்தானுக்கு 'திரும்பிச் செல்லுங்கள்' என்றும் கூறப்பட்டுள்ளனர்.
தங்கள் குடும்பத்தினரை இலக்காகக் கொண்ட சில இழிவான கருத்துகளின் Screenshot-களை கவாஜாவின் மனைவி ரேச்சல் பகிர்ந்து, இந்த வருத்தமான தகவலை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர், "கடந்த ஒரு வாரத்தில் எங்களுக்கு வந்த சில கருத்துக்களின் ஒரு சிறிய மாதிரியை நான் சேகரித்துள்ளேன். இது புதிது என்று சொல்ல விரும்புகிறேன்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற செய்திகளை நாங்கள் எப்போதும் பெற்று வருகிறோம். ஆனால் நிச்சயமாக, அவை இப்போது மோசமடைந்துள்ளன" என கூறியுள்ளார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |