உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி; அமெரிக்காவின் மிக உயர்ந்த போர்க்கப்பல்..ஈரானுடனான மோதலில் விலகல்
அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, ஈரானுடனான மோதல் களத்தில் இருந்து விலக்கி விலக்கி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த போர்க்கப்பல்
உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலாக கூறப்படும், அமெரிக்காவினால் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் விலை உயர்ந்த போர்க்கப்பல் USS Gerald R Ford. இந்த கப்பல் 1,106 அடி நீளம் கொண்டதாகும்.
இந்த கப்பல் ஒரு வருடம் வரை போர்ப் பணிகளில் இருந்து விலகி இருக்க நேரிடலாம் என்று 'நியூயார்க் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு காரணம் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறைகள் சரியாக செயல்படாதது முதல், கப்பலின் சில பகுதிகளில் பரவிய தீ விபத்து வரை என தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் என்று கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான போர்ப் பணிகளில் இணைந்த வெறும் இரண்டு வாரங்களிலேயே அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டது.

செங்கடலை விட்டு வெளியேறி
இந்நிலையில், தற்போது பழுதுபார்ப்புப் பணிகளுக்காக செங்கடலை விட்டு வெளியேறி, Crete தீவில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கழிவு நீர் அடைப்புகள் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகவே இதுவரை குறைந்தது 4 மில்லியன் டொலர்கள் இந்த கப்பலுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டிலிருந்து இதன் சுகாதார அமைப்பில் தொடர் கோளாறுகள் இருந்து வருகின்றன. இதுபோல் பல ஆண்டுகளாகவே இக்கப்பல் பல்வேறு சிக்கல்களால் அவதிப்பட்டு வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |