நெதர்லாந்து காதலியை கரம்பிடித்த வட மாநில இளைஞர்! 3 ஆண்டுகள் கழித்து இந்து முறையில் திருமணம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெதர்லாந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
நெதர்லாந்து பெண்ணுடன் காதல்
உத்தரபிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் ஹர்திக் வர்மா (32). இவர் நெதர்லாந்து நாட்டிற்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு, இவருக்கு மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை கிடைத்துள்ளது.
அதே நிறுவனத்தில் கெப்ரில்லா என்ற பெண்ணும் பணிபுரிந்துள்ளார். அப்போது, ஹர்திக் வர்மாவுக்கும், கெப்ரில்லாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இவர்கள், 3 ஆண்டுகள் காதலித்து லிங்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
திருமணம்
இதற்காக, கடந்த வாரம் தனது காதலி கெப்ரில்லாவுடன் சேர்ந்து ஹர்திக் வர்மா இந்தியா வந்துள்ளார். பின்னர், பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் 29 -ம் திகதி இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, வரும் 11 -ம் திகதி குஜராத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கெப்ரில்லாவின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
பின்னர், நெதர்லாந்தில் இந்த தம்பதியினருக்கு வரும் 25 -ம் திகதி கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |