தங்கம் அணிந்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கும் இந்திய கிராமம்.., எங்குள்ளது தெரியுமா?
வெளிநாட்டவரைவிட தங்கத்திற்கு இந்தியர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இதற்கு காரணம், தங்க நகைகளை இங்கிருக்கும் அனைவருமே ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.
குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர்கள் ஆரம்பம் முதலே சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்டில் சக்ராதா என்கிற கிராமத்தில் பெண்கள் அதிகம் தங்கம் அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவு உள்ளது.
இந்த கிராமத்தில் நடந்த உள்ளூர் பஞ்சாயத்தில்தான் வித்தியாசமான இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகை வாங்க முடியாமல் இருப்பவர்களின் சங்கடத்தை தீர்க்கதான், இந்த உத்தரவை கிராமத்தின் பெரியவர்கள் வழங்கி இருக்கின்றனர்.
இதன்படி, பெண்கள் வெளியில் வரும் போது தாலி, மூக்குத்தி, கம்மல் தவிர வேறு எதையும் அணியக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தவிர்த்த வேறு நகைகள் எதையாவது வெளியில் வரும் போது அணிந்தால், அவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரகாண்ட் கிராமத்தில், கடந்த 15-20 வருடங்களாக அதிக நகை போட்டுக்கொள்வது புது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
ஆனால், நகை இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இவ்வழக்கம் சமூக அழுத்தத்தை கொடுத்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அதிக தங்க நகைகளை அணிந்தால் அபராதம் என்கிற உத்தரவு, கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |