முதல் பாதியில் 0, இரண்டாம் பாதியில் 5 கோல்! சூறையாடிய ரியல் மாட்ரிட்..ஹாட்ரிக் அடித்த இளம் வீரர்
UEFA லீக்கில் ரியல் மாட்ரிட் அணி 5-2 என்ற கோல் கணக்கில் டொர்ட்மன்ட்அணியை வீழ்த்தியது.
Santiago Bernabeu மைதானத்தில் நடந்த கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் டொர்ட்மன்ட் (Dortmund) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் டொர்ட்மன்ட் வீரர் Donyell Malen கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து சக அணி வீரர் Jamie Bynoe-Gittens (34வது நிமிடம்) கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி அதிர்ச்சியடைந்தது.
Vinícius Júnior's solo stunner 😮💨
— UEFA Champions League (@ChampionsLeague) October 22, 2024
Singo's long-range strike 🤯
Vote for your Goal of the Day 👇#UCLGOTD | @Heineken
முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் மாட்ரிட் அணி விஸ்வரூபமெடுத்தது.
60வது நிமிடத்தில் Antonio Rudiger ஒரு கோலும், இளம் வீரர் Vinicius Junior ஒரு கோலும் அடித்து எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் Lucas Vazquez 83வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் V.Junior அடுத்தடுத்து (86 மற்றும் 90+3வது நிமிடம்) இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி 5-2 என மிரட்டல் வெற்றி பெற்றது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |