புதிய கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா: தவெகவுடன் கூட்டணி கேள்விக்கு அளித்த பதில்
வி.கே.சசிகலா தனது புதிய கட்சி மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
வி.கே.சசிகலா
அதிமுக-வின் தற்காலிக பொதுச்செயலாளராக செயல்பட்ட வி.கே.சசிகலா, 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியின் பெயரை அறிவித்தார்.
அத்துடன் கட்சியின் சின்னமாக 'தென்னந்தோப்பு'-ஐ அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அவர், "தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்துகொண்டு இருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன்" என்றார்.
மேலும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ஒத்துக் கருத்துடன் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |