நீதிபதி முன் ஆஜரான செந்தில் பாலாஜி: ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு காவல் நீட்டிப்பு
கடந்த மாதம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் திடீரென்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் கடந்த மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது. இதன் பின், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜரானார். இன்றுடன் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவந்ததையடுத்து, ஜூலை 26-ந்தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |