இந்த நிறுவன கொரோனா தடுப்பூசி வேண்டாம்... அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அமெரிக்கர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசியைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களுக்கு, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, பைசர் அல்லது மொடெர்னா நிறுவன தடுப்பூசிகளை வழங்குமாறு, அமெரிக்க சுகாதார ஆலோசகர்கள் அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான கொரோனா தடுப்பூசி, இரத்தக்கட்டிகளை உருவாக்குவதைத் தொடர்ந்து அவர்கள் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசியால் உருவாகும் இரத்தக்கட்டிகளால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பைசர் மற்றும் மொடெர்னா நிறுவன தடுப்பூசிகளில் இத்தகைய பக்க விளைவுகள் இல்லை என்பதோடு, அவை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசியைவிட செயல் திறனும் அதிகம் உடையவையாக உள்ளதாக அமெரிக்க சுகாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், அவர்களது பரிந்துரை குறித்து, அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குநரான Dr. Rochelle Walenskyதான் முடிவு செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.