தடுப்பூசி போடப்பட்டவர்கள் கட்டாயம் இதை செய்யக்கூடாது.. எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல்
தடுப்பூசி போடப்பட்ட இருவர் உட்புறங்களில் சந்திக்கக்கூடாது என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்
ட்விட்டர் வீடியோவில் பொதுமக்களின் கேள்விகளுக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பூசிகள் முற்றிலுமாக அகற்றாது என்று அரசாங்கம் கருதுகிறது. கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இருவர் வீட்டிற்குள் சந்திக்ககூடாது.
ஏனெனில் தடுப்பூசிகள் 100% பாதுகாப்பை அளிக்கவில்லை, அதனால்தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிப்புறங்களில் இருக்கும் போது நீங்கள் விரும்பும் பலருடன் சேர்ந்து விளையாடலாம்.
"முக்கிய விஷயம் என்னவென்றால், அது வெளியில் இருப்பதால் அது பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்," என்று அவர் கூறுகிறார்.
