மீண்டும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படலாம்... கோழிகளுக்கு: விரைவில் சோதனை முயற்சி
அமெரிக்காவில் மிக மோசமாக பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர அமெரிக்கா தயாராகி வருகிறது.
தடுப்பூசி சோதனை முயற்சி
இதன் முதற்கட்டமாக தடுப்பூசி சோதனை முயற்சியையும் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். மிக விரைவில் இந்த திட்டம் நடைமுறை சாத்தியமாகும் எனவும் அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
@getty
சோதனை முயற்சி தொடங்கப்படுவதற்கு, மூன்று மாதங்கள் தேவைப்படும் எனவும், மிருகங்களுக்கான தடுப்பூசிக்கு உரிமம் பெற ஆண்டுகள் பல ஆகலாம் எனவும், ஆனால் தற்போதய சூழலை கருத்தில்கொண்டு, அவசரகால முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வியாபித்துவரும் பறவை காய்ச்சலானது பாலூட்டும் மிருகங்களுக்கும் பரவியுள்ள நிலையில், இன்னொரு பெருந்தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு தடுப்பூசி சோதனை என்பது நடைமுறை சிக்கல்கள் அதிகம் எனவும், ஆனால் மனிதர்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு பெறப்படும் அனுமதி எதுவும் மிருகங்கள் தொடர்பில் தேவையில்லை எனவும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
றவைகளுக்கு தடுப்பூசி என்பது சிக்கல்
இருப்பினும், பறவைகளுக்கு தடுப்பூசி என்பது சிக்கல் மிகுந்த ஒன்று எனவும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
@getty
2014-2015க்கு பின்னர் அமெரிக்காவில் பறவை காய்ச்சல் சிக்கல் உக்கிரமடைந்து வருகிறது. அப்போது சுமார் 50 மில்லியன் பறவைகள் இறந்தன. 2022 ஜனவரி மாதம் மீண்டும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட, அப்போது 58 மில்லியன் பறவைகள் இறந்தன.
இதனிடையே, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு சிறிய அச்சுறுத்தலையே ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.