பிரான்ஸ் இந்த விதியை அமுல்படுத்தக்கூடாது! அரசாங்க செய்தி தொடர்பாளர் கருத்து
பிரான்சில் தடுப்பூசி போடாதவர்களை ஊசி போட ஊக்குவிக்க, கட்டாய தடுப்பூசி உத்தரவு ஒரு சரியான வழியாக இருக்காது என அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
பிரான்சில் தற்போது உள்ள விதியின் கீழ், மக்கள் உணவகங்கள் மற்றும் பார்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் அல்லது தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை காட்ட வேண்டும்.
இந்நிலையில், ஒமிக்ரான் அதிகரித்து வருவதால், தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை நீக்கி, தடுப்பூசி ஆதாரத்தை மட்டும் ஏற்கும் மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவை விட தடுப்பூசி பாஸ் சிறப்பானது என அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டாய தடுப்பூசி விதியை பிரான்ஸ் அமுல்படுத்தக்கூடாது என Gabriel Attal கூறினார்.
தடுப்பூசி போடாதவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 10 மில்லியன் கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அவற்றை நடத்துவதற்கு அதிகமான சுகாதாரப் பணியாளர்களை அரசாங்கம் ஏற்பாடு செய்ததாகவும் Attal கூறினார்.