பிரான்சில் தடுப்பூசி பாஸ் எப்போது முடிவுக்கு வரும்? சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரான்சில் மருத்துவமனைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தடுப்பூசி பாஸ் அமுலில் இருக்கும் என நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Olivier Veran தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பாஸ் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க உதவுகிறது மற்றும் மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைத் தணித்து, கொரோனா தடுப்பூசி போட அதிகமான மக்களைத் தூண்டியுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.
அதேசமயம், தடுப்பூசி பாஸ் உள்ளூர் உரிமைகளை பாதிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் மற்றும் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கையில் காலியாகும் வரை அல்லது அவசரமற்ற நடைமுறைகளை ரத்து செய்யாமல் மருத்துவமனைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை, தடுப்பூசி பாஸ் அமுலில் இருக்கும் என சுகாதாரத்துறை அமைச்சரை் Olivier Veran தெரிவித்துள்ளார்.
பிரான்சில் தற்போது 3,700 கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர், தடுப்பூசி பாஸ் விதிகளை அகற்றுவதற்கு முன்பு, அந்த எண்ணிக்கை சுமார் 1,000 ஆகக் குறைய வேண்டும் என்று Veran கூறினார்.