விஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு? பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்
பிரபல திரைப்பட நடிகரான வடிவேல் சமீபத்தில் விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு கண்ணீர்விட்டு அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில், ராஜ்கிரண் நடிப்பில் உருவான என் ராசாவின் மனசிலே படம் மூலம் அறிமுகமானவர் தான் வடிவேலு, அதன் பின் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம், காமெடி நடிகராக பிரபலமானார்.
இருப்பினும், இவர் விஜயகாந்த் மூலம் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். விஜயகாந்த் நடித்த பல படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
நகைச்சுவையின் அரசனாக இவரை தமிழ் திரையுலகம் கொண்டாடினாலும், கடந்த 2011-ஆம் ஆண்டு இவருக்கும் பிரச்சனையை கொடுக்க துவங்கியது.
அதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது.
அப்போது திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வடிவேலு, விஜயகாந்தை தரம் தாழ்ந்து விமர்சித்தார்.
இதனால் சினிமா பிரபலங்கள் பலருமே வடிவேலு மீது அதிருப்தி அடைந்தனர். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தேமுதிக பிரதான எதிர்க்கட்சியானது.
அதன்பிறகு இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் வடிவேலு தவித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம்தான் லாக்டவுன், நான் 10 வருடமாக லாக்டவுனில் தான் இருக்கிறேன்.
உடம்பில் நடிக்க தெம்பிருந்தும் வாய்ப்பில்லாமல் வீட்டில் முடங்கி கிடப்பது எவ்வளவு பெரிய வேதனை தெரியுமான என்று பேசி கண்ணீர்விட்டார்.
வடிவேலு கண்கலங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது விஜயகாந்திடம் நடிகர் வடிவேலு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
தான் பேசியதெல்லாம் தவறுதான் என்று கூற, உடனே பிரேமலதா கேப்டன் ஒன்றும் நினைக்க மாட்டார் என்று ஆறுதல் கூறியுள்ளார்.