53 பந்துகளில் 204 ஒட்டங்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! நொறுங்கிய சாதனைகள்
Vaibhav sooryavanshi fastest double century: வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் இரட்டைசதம் அடித்து பல சாதனைகளை படைத்தார்.
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அதிவேக இரட்டைசதம் அடித்து சாதனை படைத்தார்.
ஹர்ப்ரீத் சதம்
இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக 204 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்தார்.
UAE will be pleased with their batting effort against a strong India ‘A’ bowling attack, posting 249 on the board thanks to a heroic knock from Harpreet Singh Bhatia 🙌 Now, it’s over to the UAE bowlers to defend the total 👀 #DPWorldMensAsiaCupRisingStars2026 #INDvUAE #ACC https://t.co/KMoUrvXCfd
— Asian Cricket Council (@ACCMedia1) November 24, 2026
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான ACC ஆடவர் ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ் ஒருநாள் போட்டி தோகாவில் நடந்தது.
முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா (Harpreet Singh Bhatia) 144 பந்துகளில் 130 ஓட்டங்கள் (4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்) விளாசினார்.
அணித்தலைவர் பசில் ஹமீத் (Basil Hameed) 36 ஓட்டங்கள் எடுக்க, ஐக்கிய அரபு அமீரக அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியின் தரப்பில் அர்ஷத் கான் 4 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா, சூர்யன்ஷ், ஹர்ஷ் தூபே மற்றும் ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
வைபவ் சூர்யவன்ஷி வாணவேடிக்கை
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். 28 பந்துகளில் சதம் விளாசிய வைபவ், 52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அதிர வைத்தார்.

மொத்தம் 53 பந்துகளை எதிர்கொண்ட அவர், 28 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 204 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிங்கு சிங் 19 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 14.2 ஓவர்களிலேயே 254 ஓட்டங்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
சாதனைகள்
இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி இரட்டைசதம் விளாசியதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தார்.
- List A கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் (28 பந்துகளில்) விளாசியவர்
- List A கிரிக்கெட்டில் 40 பந்துகளில் 150 ஓட்டங்கள் விளாசிய வீரர்
- List A கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் (52 பந்துகளில்) விளாசியவர்
- List A கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச சிக்ஸர்கள் விளாசிய துடுப்பாட்ட வீரர் (28 சிக்ஸர்கள்)
