வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது அரைசதம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் விளாசினார்.
அபிஷேக் ஷர்மா சொதப்பல்
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 2 ஓட்டங்களில் முஸரபாணி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்
அடுத்து வந்த இஷான் கிஷன் நிதானமாக ஓட்டங்களை சேர்க்க, வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார்.
கடந்த போட்டியை விட சற்று நிதானமாகவே ஆடினாலும், 31 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) அரைசதம் அடித்தார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது அரைசதம் ஆகும்.
மறுமுனையில் இஷான் கிஷன் 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |