11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம்
இலங்கை ஏ அணிக்கு எதிராக 11 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை படைத்தார்.
இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி தம்புள்ளையில் நடந்து வருகிறது.
Well Vaibhav Sooryavanshi has created
— D’Raz (@drazspeaks) June 21, 2026
Fastest fifty in LIST A cricket
Fifty of 11 balls 🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/NCTKFQZ4RU
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ப்ரியான்ஸ் ஆர்யா ஆட்டத்தை தொடங்கினர்.
நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 11 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற 20 ஆண்டுகால சாதனையை நொறுக்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |