சிக்ஸர்மழையில் 108 ஓட்டங்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! சையத் முஷ்தாக் டி20யில் அதகளம்
சையத் முஷ்தாக் அலி தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 61 பந்துகளில் 108 ஓட்டங்கள் விளாசினார்.
ருத்ர தாண்டவம்
ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் மகாராஷ்டிரா மற்றும் பீகார் அணிகள் மோதின. 
முதலில் களமிறங்கிய பீகார் அணியில் பிபின் (4), பியூஷ் (7) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
எனினும், வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) ருத்ர தாண்டவம் ஆடினார். அவரது ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
20 ஓவர்கள் முடிவில் பீகார் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது. கடைசி வரை களத்தில் நின்ற வைபவ் சூர்யவன்ஷி 61 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்கள் விளாசினார்.
ஆகாஷ் ராஜ் 26 (30) ஓட்டங்களும், ஆயுஷ் லோஹருகா 25 (17) ஓட்டங்களும் எடுத்தனர். ஹங்கர்கேகர், விக்கி மற்றும் ஆர்ஷின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பிரித்வி ஷா அதிரடி
பின்னர் ஆடிய மகாராஷ்டிரா அணியில் அதிரடியில் மிரட்டிய பிரித்வி ஷா 30 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசினார்.
நிராஜ் ஜோஷி 3 சிக்ஸர்களுடன் 30 (24) ஓட்டங்களும், ரஞ்ஜீத் நிகாம் 16 பந்துகளில் 27 ஓட்டங்களும் விளாச, மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மொஹம்மது இஸார், சாஹிபுல் தலா 2 விக்கெட்டுகளும், காலித் ஆலம், சாகிப் ஹுசைன் மற்றும் சுராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Vaibhav Suryavanshi smashed his maiden hundred in the Syed Mushtaq Ali Trophy, scoring an unbeaten 108 off 61 balls against Maharashtra.#SMAT2025 pic.twitter.com/9G82a9lRLG
— Circle of Cricket (@circleofcricket) December 2, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |