அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி: சரவெடியாக 84 ரன் விளாசிய பிரப்சிம்ரன் சிங்
ஆப்கானில்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் பிரப்சிம்ரன் சிங் 84 ஓட்டங்கள் விளாசினார்.
வைபவ் சூர்யவன்ஷி விளாசல்
முத்தரப்பு ஏ அணிகளுக்கான போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
ஆப்கானிஸ்தான் ஏ அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்திய ஏ அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 22 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசினார்.
பிரப்சிம்ரன் ருத்ரதாண்டவம்
ப்ரியன்ஷ் ஆர்யா 8 ஓட்டங்களில் வெளியேற, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரப்சிம்ரன் கூட்டணி ருத்ரதாண்டவம் ஆடியது.
அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் சிங் (Prabhsimran Singh) 69 பந்துகளில் 84 ஓட்டங்கள் (14 பவுண்டரிகள்) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து, அணியின் ஸ்கோர் 245 ஓட்டங்களாக உயர்ந்தபோது ருதுராஜ் கெய்க்வாட் 66 (8) ஓட்டங்களில் அவுட் ஆனார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |