புதிய வரலாறு படைத்த 14 வயது சூர்யவன்ஷி! 200 ரன் குவிப்பேன் என பேச்சு
இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை சதம் விளாசினார்.
வைபவ் சூர்யவன்ஷி
வொர்செஸ்டரின் நியூ ரோடு மைதானத்தில் நடந்த U19 வீரர்களுக்கான ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
Highlights of Vaibhav Suryavanshi's superb 143 off 78 against England Under-19s 🙌
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 5, 2025
(via @WorcsCCC) pic.twitter.com/alFqUTxNHL
முதலில் ஆடிய இந்திய அணி 363 ஓட்டங்கள் குவிக்க, இங்கிலாந்து அணி 308 ஓட்டங்கள் எடுத்து 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 78 பந்துகளில் 10 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 143 ஓட்டங்கள் விளாசினார். விஹான் மல்ஹோத்ரா 121 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 129 ஓட்டங்கள் குவித்தார்.
200 ஓட்டங்கள் குவிக்க
இதில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டியில் அதிவேக சதம் விளாசிய இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார்.
போட்டிக்கு பின்னர் பேசிய வைபவ் சூர்யவன்ஷி, "அடுத்தப் போட்டியில் 200 ஓட்டங்கள் குவிக்க முயற்சி செய்வேன். 50 ஓவர்களும் களத்தில் நிலைத்து நின்று விளையாட முயல்வேன். எவ்வளவு அதிக ஓட்டங்கள் குவிக்கிறேனோ, அணிக்கு அவ்வளவு சாதகம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |