U19 உலகக்கிண்ணம்: வங்காளதேச பந்துவீச்சை நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி
வங்காளதேச அணிக்கு எதிரான U19 உலகக்கிண்ணத் தொடர் போட்டியில், இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 72 ஓட்டங்கள் விளாசினார்.
விக்கெட்டுகள் சரிவு
புலவாயோவில் இந்தியா, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான U19 உலகக்கிண்ணப்போட்டி நடந்து வருகிறது.
insidesportscricket
நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
இந்திய அணியில் ஆயுஷ் மாத்ரே 6 ஓட்டங்களிலும், வேதாந்த் திரிவேதி டக்அவுட் ஆகியும் வெளியேறினர்.
சூர்யவன்ஷி அபாரம்
ஓட்டங்கள் எடுக்க விஹான் மல்ஹோத்ரா தடுமாறிய நிலையில், மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) அதிரடியில் மிரட்டினார்.
X
அரைசதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, அணியின் ஸ்கோர் 115 ஆக உயர்ந்தபோது ஆட்டமிழந்தார்.
அவர் 67 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து களமிறங்கிய அபிக்யான் குண்டு நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார்.
Instagram
Getty Images
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |