வைபவ் சூர்யவன்ஷியின் சாதனை சதத்தால் இந்தியா இமாலய வெற்றி
தனது அதிரடி சதம் வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா இமாலய வெற்றி
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை நேற்று தொடங்கி வரும் நவம்பர் 23 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில், இந்திய ஏ அணியும் ஐக்கிய அரபு அமீரக அணியும் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 297 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 144 ஓட்டங்களும், ஜிதேஷ் சர்மா 83 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, 298 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், 148 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
வைபவ் சாதனை சதம்
இதில், வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில், 11 பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்கள் விளாசி 144 ஓட்டங்கள் குவித்தார்.
[
]
32 பந்துகளில் சதத்தை எட்டிய அவர், T20 பந்துகளில் அதிவேக சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அபிஷேக் சர்மா மற்றும் உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.

முன்னதாக 2025 ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் தனது முதல் சதத்தை வைபவ் சூர்யவன்ஷி அடித்திருந்தார்.
மேலும், 35 க்கு குறைவான பந்துகளில் 2 T20 சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |