15 வயது சூர்யவன்ஷிக்கு கிடைத்த மொத்த பரித்தொகை எவ்வளவு தெரியுமா?
ஐபிஎல் 2026 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி SUV கார் உட்பட ஏராளமான பரிசுகளை வென்றுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொடரில் அனைவரையும் தனது அபார ஆட்டத்தினால் வியக்கவைத்த வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi).
மைதானத்தில் சிக்ஸர்மழையை பொழிந்து பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, பல ஜாம்பவான்களின் சாதனைகளையும் தூள் தூளாக நொறுக்கினார்.
அதன் காரணமாக ஆரஞ்சு தொப்பி உட்பட மொத்த 5 விருதுகளை தட்டிச் சென்று அசத்தினார்.
அவற்றின் மூலம் மொத்தமாக ரூ.55 லட்சம் பரிசுத்தொகையையும், SUV கார் ஒன்றையும் அவர் பெற்றுள்ளார்.

3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
எனினும், சட்டப்படி காரினை ஒட்டிச் செல்ல அவர் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதிக ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றதற்காக, சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசாக கிடைத்தது.
அதேபோல் Most Valuable வீரர் விருது அவருக்கு ரூ.15 லட்சத்தைப் பெற்று தந்தது. அத்துடன் ஸ்ட்ரைக்ரேட், சூப்பர் ஸ்ட்ரைக்கர் போன்ற விருதுகள் மூலம் அவர் மேலும் ரூ.10 லட்சத்தை பரிசாக வென்றார்.

சீஸனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருது அவருக்கு ரூ.10 லட்சத்தைப் பெற்றுத் தந்தது.
மொத்தம் 72 சிக்ஸர்களை பறக்கவிட்டதற்காக மேலும் ரூ.10 லட்சத்தை பரிசுக்கணக்கில் சேர்த்துக் கொண்டார் சூர்யவன்ஷி.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |