சீமான் தீர்ந்து போவாரா? வன்மையாகக் கண்டிக்கிறேன் - வைரமுத்து காட்டம்
நாம் தமிழர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமானின் ட்விட்டர் முடக்கம்
இந்தியாவில் சமூக வலைத்தளமான ட்விட்டரை பெரும்பாலான பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ட்விட்டரை பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலரது கணக்குகளும் முடக்கப்பட்டது.
இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை சீமானுக்காக தெரிவித்தார்.
வைரமுத்து கண்டனம்
தற்போது கவிஞர் வைரமுத்துவும் தனது ஆதரவினை சீமானுக்கு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'வன்மையாகக் கண்டிக்கிறேன். சுட்டுரையை (ட்விட்டர்) முடக்கிவிட்டால் சீமானை தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களை கட்டாதீர்கள். கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்' என காட்டமாக கூறியுள்ளார்.
வன்மையாகக் கண்டிக்கிறேன்
— வைரமுத்து (@Vairamuthu) June 1, 2023
சுட்டுரையை முடக்கிவிட்டால்
சீமான் தீர்ந்து போவாரா?
வெயிலுக்கு எதிராகக்
குடைபிடித்தால்
காணாமற் போகுமோ கதிரவன்?
கருத்தைக்
கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;
கை கால்களைக் கட்டாதீர்கள்
கருத்துரிமை இன்னும்
உயிரோடு இருப்பதாக
நம்புகிறவர்களுள்
நானும் ஒருவன்