கருணாநிதியை வைத்து தாக்கும் வைரமுத்து! மறைமுகமாக யாரை சாடுகிறார்?
முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை வைத்து கவிஞர் வைரமுத்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இளையராஜா- வைரமுத்து சர்ச்சை
திரைப்படங்களில் உள்ள பாடல்களின் இசை காப்புரிமை தனக்கு சொந்தம் என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதே போல, ரஜினிகாந்தின் 'கூலி' பட டைட்டில் டீசரில் தனது பாடல் இசையை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
அதே நேரத்தில் இளையராஜாவின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். அவர், "பாடல்கள் எழுதிய பாடலாசிரியரும் இப்படி உரிமை கொண்டாடினால் என்னவாகும்?" என்று பேசியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரிய விவாதமாகவே உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து பதிவு
அவர் தனது பதிவில், "கலைஞருக்கும், அ.இ.அ.தி.முகவிலிருந்து தி.மு.கவில் வந்துசேர்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கும் நடந்த உரையாடல் எனக்கு வாய்மொழியாக வந்தது;
தயக்கத்தோடு கலைஞரையே கேட்டு உறுதி செய்தது சொற்கள் மாறியிருக்கலாம்; சொன்னபொருள் இதுதான் ‘வைரமுத்த ரொம்ப நம்பாதீங்க தலைவரே!’ ‘ஏன்? எதனால?’ ‘அவரு உங்களப் புகழ்ந்து பேசுறாரே தவிர ஜெயலலிதாவ எப்பவும் திட்ட மாட்டேங்குறாரு’ (கலைஞர் சிறு சிந்தனைக்குப் பிறகு)
‘நீ அங்க இருந்து இங்க வந்திருக்க அங்க இருந்தபோது என்னத் திட்டுன; இங்க இருந்து அந்த அம்மாவத் திட்டுற. வைரமுத்து எப்பவும் இடம் மாறல ஜெயலலிதா வைரமுத்துக்கு எதிரியும் இல்ல. அவரு தமிழுக்காக நம்மகூட நிக்கிறாரு இன்னொண்ணு அவரு யாரையும் திட்டமாட்டாரு; அது அவரு இயல்பு’
கோள் சொன்னவர் குறுகிப்போனார் இப்படித்தான் கேடுகள் ஈட்டி எறியும்போதெல்லாம் கேடயமாவது சத்தியம்
தன்னை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செல்வோருக்கு கவிஞர் வைரமுத்து பதில் அளிக்கிறாரா என தெரியவில்லை. இல்லையென்றால் இளையராஜா தொடர்பான எழுந்த சர்ச்சையில் மறைமுகமாக யாரையாவது சாடுகிறாரா என தெரியவில்லை.
தற்போது, கருணாநிதியிடம் வைரமுத்துவை பற்றி கோள் மூட்டியவர் யார் என சமூகவலைதளத்தில் ஒரு விவாதமே எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |