விஷச்சாராய பலி 50 ஆக உயர்வு! செத்து மிதப்பது தெரிந்த பின்னும்..கவிஞர் வைரமுத்து வேதனை
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பலி 50 ஆக உயர்வு
தமிழக மாவட்ட கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய நூற்றுக்கணக்கானோர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விஷச்சாராயம் அருந்திய பலருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.
வைரமுத்து வேதனை
அவரது பதிவில், ''எந்தத் தேன் உணவானதோ அதே தேனில் எறும்பும்
எந்தத் தண்ணீரில் மலரானதோ அதே தண்ணீரில் தாமரையும்
எந்த நதியில் உயிர்கொண்டதோ அதே நதியில் மீனினனும்
செத்து மிதப்பது தெரிந்த பின்னும்
எந்த மது மறக்கச் செய்கிறதோ அதே மதுதான் மரிக்கச் செய்கிறது என்பதனை மறந்தனயே மனிதா!
நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்
இறப்பின் காரணம் எதுவாயினும் இரங்கத்தான் வேண்டும் சாராயச் சாவுகளுக்காகவல்ல; சந்ததிகளுக்காக'' என தெரிவித்துள்ளார்.
எந்தத் தேன் உணவானதோ
— வைரமுத்து (@Vairamuthu) June 21, 2024
அதே தேனில் எறும்பும்
எந்தத் தண்ணீரில் மலரானதோ
அதே தண்ணீரில் தாமரையும்
எந்த நதியில் உயிர்கொண்டதோ
அதே நதியில் மீனினமும்
செத்து மிதப்பது
தெரிந்த பின்னும்
எந்த மது
மறக்கச்செய்கிறதோ
அதே மதுதான்
மரிக்கச்செய்கிறது என்பதனை
மறந்தனயே மனிதா!
நல்ல சாராயம்
குறைக்கப்பட…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |