மகனே மனோஜ் மறைந்துவிட்டாயா? உன் தந்தையை எப்படி தேற்றுவேன்? கவிஞர் வைரமுத்து இரங்கல்
நடிகர் மனோஜின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
மனோஜ் மறைவு
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் தனது 48 வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பிரபலங்கள் பலரும் நடிகர் மனோஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை வடிவில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து இரங்கல்
அவரது பதிவில், "மகனே மனோஜ்! மறைந்து விட்டாயா? பாரதிராஜாவின் பாதி உயிரே! பாதிப்பருவத்தில் பறந்துவிட்டாயா? 'சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா' என்று உனக்கு அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப் பிள்ளைநீ போய்விட்டாயா? உன் தந்தையை எப்படித் தேற்றுவேன்? எனக்குக் கடன் செய்யக் கடமைப்பட்டவனே!
உனக்கு நான் கடன்செய்வது காலத்தின் கொடுமைடா என்று தகப்பனைத் தவிக்கவிட்டுத் தங்கமே இறந்துவிட்டாயா?
உன் கலைக் கனவுகள் கலைந்து விட்டனவா? முதுமை - மரணம் கட்டாயம்தான். ஆனால், முதுமை வயதுபார்த்து வருவதில்லை
சாவுக்குக் கண்ணில்லை, எங்கள் உறக்கத்தைக் கெடுத்துவிட்டவனே! உன் உயிரேனும் அமைதியில் உறங்கட்டும்" என கூறியுள்ளார்.
மகனே மனோஜ்!
— வைரமுத்து (@Vairamuthu) March 26, 2025
மறைந்து விட்டாயா?
பாரதிராஜாவின்
பாதி உயிரே!
பாதிப் பருவத்தில்
பறந்து விட்டாயா?
'சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரியவப்போம் வாடா வாடா'
என்று உனக்கு
அறிமுகப் பாடல் எழுதினேனே
சிங்கம் இருக்கப்
பிள்ளைநீ போய்விட்டாயா?
உன் தந்தையை
எப்படித் தேற்றுவேன்?
"எனக்குக் கடன்… pic.twitter.com/ngB7b1Crel
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |