அமைச்சர்களுக்கு அறிவுரை சொன்ன கவிஞர் வைரமுத்து.., துபாயில் வைத்து தோன்றிய ஐடியா
துபாய் சென்றுள்ள கவிஞர் வைரமுத்து அங்குள்ள கழிவு மேலாண்மை குறித்து வியந்து, அமைச்சர்களுக்கு அறிவுரை ஒன்றை தெரிவித்துள்ளார்.
உலக அளவில் திடக்கழிவு மேலாண்மை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் டன் கணக்கில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
இதனால், குப்பைகளை தரம் பிரித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு அரசுக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் சேர்கிறது. அவற்றை வேளாண்மை செய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், துபாய் சென்று கவிஞர் வைரமுத்து வெளிநாடுகளுக்கு செல்லும் அமைச்சர்கள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
வைரமுத்து பதிவு
கவிஞர் வைரமுத்து தனது பதிவில், "துபாயில் இருக்கிறேன். எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல. பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு.
இதில் துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு.
வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |