கூகிள் மேப்பால் ஏற்பட்ட விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
புதிதாக ஒரு பகுதிக்கு செல்லும் போது, வழிகளை கண்டறிய கூகிள் மேப் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
அதேவேளையில், கூகிள் மேப் சில நேரங்களில் தவறான வழிகளை காண்பித்து, சிலரை விபத்தில் சிக்க வைக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.
கூகிள் மேப்பால் 4 பேர் உயிரிழப்பு
அதே போல், ராஜஸ்தான் மாநிலத்தில் கூகிள் மேப் பார்த்து ஓட்டுநர் வேன் ஒட்டி சென்றதில் விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம், Kanakheda கிராமத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று, வேன் மூலம் பில்வாராவில் உள்ள கோவிலுக்கு சென்று இரவில் விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஓட்டுநர் கூகிள் மேப் பார்த்து ஓட்டியுள்ளார்.
அந்த 3 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்ட ஆற்று பாதையை வழியாக செல்லுமாறு கூகிள் மேப் அறிவுறுத்தியுள்ளது.
இரவு நேரம் என்பதை சரியாக கவனிக்க தவறிய ஓட்டுநர், கூகிள் மேப் காட்டிய வழியில் செல்ல அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்த வேன் கவிழ்ந்தது.
விபத்தில் சிக்கிய பயணிகள் கூச்சலித்த சத்தம் கேட்ட மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதில் 5 பேர் வேனின் மீது ஏறி தங்களை தற்காத்து கொண்டனர். அதன்பின்னர், மீட்பு குழுவினர் மற்றும் கிராமத்தினர் சேர்ந்து 5 பேரை உடனடியாக மீட்டனர்.
இதனையடுத்து, ஆற்றில் அடித்து செல்லபப்பட்ட 3 பெண்கள் மற்றும் 4 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |