சகோதரரின் படுகொலை, தாயார் எடுத்த முடிவு... வான்கூவர் தாக்குதல் நபரின் துயரமான குடும்ப பின்னணி
வான்கூவர் திருவிழாவில் தாக்குதலில் ஈடுபட்டு 11 பேர் மரணத்திற்கு காரணமான நபரின் துயரமான குடும்ப பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
8 கொலை வழக்கு
வான்கூவர் பகுதியில் பிலிப்பைன்ஸ் வம்சாவளியினர் கொண்டாடும் திருவிழாவின் போதே 30 வயதான Kai-Ji Adam Lo என்பவர் கூட்டத்தின் மீது தமது வாகனத்தை மோதவிட்டு தாக்குதலில் ஈடுபட்டார்.
தற்போது அவர் மீது இரண்டாம் நிலை 8 கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் வழக்குகள் அவர் மீது பதியப்படலாம் என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அவரது சகோதரர் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது தாயார் தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, Lo கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சில சூழ்நிலைகளில் பொலிசாருக்குத் தெரிந்தவர் என்று அதிகாரிகள் ஏற்கனவே கூறியுள்ளனர். தாக்குதல் நடந்த நாளில், லோ சித்தப்பிரமையால் பாதிக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு அவரது சகோதரர் அலெக்சாண்டர் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவரது மனநலம் மோசமடைந்து வந்தது, அதன் பின்னர் அவர் பொலிஸ் அதிகாரிகளுடன் டசின் கணக்கான முறை தொடர்பு கொண்டிருந்தார்.
சனிக்கிழமை இரவு லோ முன்னெடுத்தத் தாக்குதலில் இதுவரை 11 பேர்கள் மரணமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு வான்கூவர் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படவில்லை என்றே குறிப்பிட்டது.
தற்கொலைக்கு முயன்றதாக
தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர், திரண்ட மக்கள் கூட்டத்தினரிடம் லோ வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. லோவின் குடும்பம் வான்கூவரில் உள்ள தங்கள் வீட்டிற்கு குடிபெயர்ந்த சில மாதங்களில் அவரது தந்தை இறந்துவிட்டார்.
லோவின் சகோதரர், 31 வயதான அலெக்சாண்டர், ஜனவரி 28, 2024 அன்று அதிகாலை 1 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் 39 வயதான நபர் அந்த குடியிருப்பில் இருந்து கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது.
இதனையடுத்து தமது சகோதரருக்காக லோ பொதுமக்களிடம் நிதியுதவி கோரினார். அலெக்சாண்டரின் இறுதிச்சடங்குகளுக்காக 9,000 டொலர் திரட்டப்பட்டது.
இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் மீண்டும் பொதுமக்களிடம் நிதியுதவி கோரிய லோ, இந்த முறை தாயார் தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிடிருந்தார். சனிக்கிழமை தாக்குதல் நடப்பதற்கும் சில மணிநேரம் முன்பு குடும்ப உறுப்பினர் ஒருவர் மனநலப் பிரிவைத் தொடர்பு கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |