வான்கூவர் ஒயிட்கேப்ஸ் கோல்மழை! நொறுங்கிய சியாட்டில் சௌண்டர்ஸ்
சியாட்டில் சௌண்டர்ஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் வீழ்த்தியது.
BC Place மைதானத்தில் நடந்த MLS கால்பந்து போட்டியில் வான்கூவர் ஒயிட்கேப்ஸ் மற்றும் சியாட்டில் சௌண்டர்ஸ் அணிகள் மோதின.
பிரையன் ஒயிட்
ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே வான்கூவர் வீரர் பிரையன் ஒயிட் (Brian White) கோல் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மற்றொரு வான்கூவர் வீரரான ரியான் கௌல்ட் 9வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
பின்னர் 43வது நிமிடத்தில் மத்தியாஸ் லபோர்டா கோல் அடிக்க, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் முதல் பாதியில் முன்னிலை வகித்தது.
53வது நிமிடத்தில் வான்கூவர் வீரரான பிரையன் ஒயிட் கோல் அடிக்க, சியாட்டில் சௌண்டர்ஸ் 62வது நிமிடத்தில் ஜோர்டன் மோரிஸ் பதிலடி கோல் அடித்தார்.
அலெக்சா சிவேட்கோவிக் 69வது நிமிடத்தில் கோல் அடிக்க, வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சௌண்டர்ஸை வீழ்த்தியது.
