நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையான கத்திரிக்காய் சாதம்.., எப்படி செய்வது?
இந்த சுவையான கத்திரிக்காய் சாதம், வாங்கி பாத் என்று அழைக்கப்படுகிறது.
நாவூறும் சுவையில் 15 நிமிடத்தில் சுவையான கத்திரிக்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்- ¼kg
- வர மிளகாய்- 8
- அரிசி- ½kg
- தனியா- 4 ஸ்பூன்
- கடுவேப்பிலை- சிறிதளவு
- கடுகு- ½ ஸ்பூன்
- வேர்க்கடலை- 2 ஸ்பூன்
- கடலை பருப்பு- 4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 4
- ஏலக்காய்- 2
- புளி- சிறிதளவு
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- பெருங்காயம்- சிறிதளவு
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கடலை பருப்பு, உளுந்து பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பிறகு இதில் தனியா, சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். இறுதியாக வர மிளகாய், புளி, வெந்தயம் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வறுத்தெடுக்கவும்.
இதன் பிறகு சூடு ஆறியவுடன் இவையனைத்தையும் மிக்ஸியில் போட்டு பெருங்காயம் பவுடராக அரைக்கவும்.
இதனிடையே கத்திரிக்காயை நறுக்கி தண்ணீரில் போடுங்கள். பின் அரிசியை வேக வைத்து தனியாக வைக்கவும்.
அடுத்து வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பு, கடுகு மற்றும் வேர்க்கடலை போட்டு தாளிக்கவும்.
பின் இரண்டு சிவப்பு மிளகாய் போட்டு கொஞ்சமாக பெருங்காயத் தூள் சேர்த்து கத்திரிக்கய் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அரைத்த பொடி 4 ஸ்பூன் போட்டு கலந்துவிடவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காயை வேக விடுங்கள்.
10 நிமிடங்கள் கழித்து தீயை குறைத்து வேகவைத்த சாதம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளறிவிட்டு கறிவேப்பிலை போட்டால் சுவையான கத்திரிக்காய் சாதம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |