என் மகனுக்கு ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிக்கிறேன்! KKR வீரர் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி
புதிதாக பிறந்து இருக்கும் என் குழந்தைக்கு தன்னுடைய ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கிய RCB
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே ஆகும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான மேக்ஸ்வெல், மஹிபால் ரோம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றி இருந்தார்.
இதனால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Varun Chakravarthy won the man of the match award for his brilliant bowling performance. pic.twitter.com/xRV7HgRFSa
— CricketMAN2 (@ImTanujSingh) April 26, 2023
விருது சமர்பணம்
இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதை அவருடைய மகனுக்கு சமர்ப்பிப்பதாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
போட்டியின் நிறைவுக்கு பிறகு தொகுப்பாளரிடம் பேசிய வருண் சக்கரவர்த்தி, புதிதாக பிறந்துள்ள தனது மகனுக்கும், மனைவிக்கும் இந்த ஆட்டநாயகன் விருதை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிதாக பிறந்த தன்னுடைய குழந்தை நான் இன்னும் பார்க்கக்கூட செல்லவில்லை என்று வருண் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு அவரது ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர்.