தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை! தென் ஆப்பிரிக்காவுக்கு மரணஅடி..கொடுத்தது குறித்து விளக்கம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மார்க்ரம் 61 ஓட்டங்கள்
தரம்சாலா நேற்று நடந்த டி20 போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்கள் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 117 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிரடியாக ஆடிய எய்டன் மார்க்ரம் (Aiden Markram) 46 பந்துகளில் 61 ஓட்டங்கள் (2 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் மற்றும் ஷிவம் தூபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்திய அணி வெற்றி
பின்னர் ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 35 (18) ஓட்டங்களும், கில் 28 ஓட்டங்களும், திலக் வர்மா 25 ஓட்டங்களும் விளாசினர்.
இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், டி20 போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி (Varun Chakravarthy) படைத்தார்.
இதுகுறித்து பேசிய வருண், "உண்மையில் இந்த மைல்கல்லைப் பற்றி எனக்குத் தெரியாது. எனவே எனக்கு தெரிவித்தற்கு நன்றி. ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசியபோது, பந்து சற்று நகர்ந்தது.
ஆனால் ஒட்டுமொத்தமாக, சூழ்நிலைகள் மிகவும் சவாலாக இருந்தன. இதற்கு முன்பு இவ்வளவு குளிரான மைதானத்தில் விளையாடியதில்லை. அதனால் இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது" என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |