வாஸ்து: வீட்டில் பணமழை பொழிய செய்ய வேண்டிய 7 விடயங்கள்., என்ன தெரியுமா?
ஜோதிடத்தின்படி, ஒரு கட்டிடத்தைக் கட்டமைக்கும் போதும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமாகும்.
வீட்டில் உள்ள பொருட்களை சரியான திசை நோக்கி வைக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிப்படையும்.
அந்தவகையில், வீட்டில் பணம் நிரம்பி வழிய செய்ய வேண்டிய 7 விடயங்கள் குறித்து பார்க்கலாம்.
1. அழகான நுழைவு வாயில்
வீட்டின் நுழைவு எப்போதும் அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும், வீட்டின் பிரதான கதவு வைப்பதற்கு வடக்கு அல்லது கிழக்கு சரியான திசை ஆகும். இவ்வாறு இருப்பதால் வீட்டில் எப்போதும் அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும்.
2. சூரிய ஒளி
வீட்டில் நன்மைகள் பெருகுவதற்கு, தடையில்லாமல் நேரடியாக சூரிய ஒளி வீட்டிற்குள் வரும்படி இருக்க வேண்டும்.
இது வீட்டை வெளிச்சமாக வைப்பதுடன் வீட்டில் உள்ள கிருமிகள், எதிர்மறை ஆற்றல்கள் ஆகியவற்றை அழிக்கக் கூடியதாகும்.
3. மீன் தொட்டி
வீட்டில் தண்ணீர் நிரப்பிய மீன் தொட்டி வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை காணமுடியும்.
பல வண்ண மீன்களை வளர்ப்பதால் வீட்டின் நேர்மறை ஆற்றல் அதிகரித்து செல்வ வளம் அதிகரித்து, அதிர்ஷ்டம் பெருகும்.'
4. முற்செடிகள் கூடாது
எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் கற்றாழை போன்ற முற்செடிகளை வீட்டிற்குள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பூக்களை கொண்டு வீட்டை அலங்கரிப்பது வீட்டில் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்துவதையும் காண முடியும்.
5. பிரமிடு கற்கள்
கூழாங்கற்களைக் கொண்டு பிரமிடு போல் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வீட்டை அழகுபடுத்தலாம்.
இது வாஸ்து குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்வதுடன், வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறை ஆற்றல்களையும் நீக்கி விடும்.
6. காற்றாடி மணி
காற்றாடி மணியை வீட்டில் வைப்பதால் அதிலிருந்து எழும்பும் ஓசையால் வீட்டில் உள்ள தடைகள் விலகி, ஆற்றல் சக்தி அனைத்து இடங்களிலும் பரவும்.
மேலும், 6 ஆல்லது 8 எண்ணிக்கையிலான குழுல்களைக் கொண்ட காற்றாடி மணிகளை வீட்டில் வைப்பதால் அதிர்ஷ்டம் பெருகும்.
7. சுத்தம்
வீட்டின் கதவுகள், ஜன்னல்களை சுத்தமாக வைத்திருப்பதால் நல்ல ஆற்றல்கள் வீட்டில் பரவுவதுடன், நேர்மறை ஆற்றலையும் வீடு மற்றும் வீட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஈர்க்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |