வத்திக்கான் சந்திப்பில் என்ன விவாதித்தோம்... ஜெலென்ஸ்கி சொன்ன தகவல்
வத்திக்கானில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கின் போது டொனால்ட் ட்ரம்புடன் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரஷ்யா மீதான தடைகள் குறித்து விவாதித்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சிறந்த சந்திப்பு
தொடர்புடைய சந்திப்பானது இருவரும் இதுவரை சந்தித்ததிலேயே சிறந்த சந்திப்பு என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி மாளிகை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சரியான முதல் படியாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே 30 நாள் போர் நிறுத்தம் தொடர்பில் ஜெலென்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதியும் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த திடீர் சந்திப்பில் ட்ரம்புடன் பொருளாதாரத் தடைகள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு பதிலளித்த ட்ரம்ப் மிகவும் வலுவான முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்ததாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
முன்னுரிமை அளிக்கும்
மேலும், புதன்கிழமை இரு நாடுகளும் கையெழுத்திட்ட முக்கியமான கனிம ஒப்பந்தம் பரஸ்பரம் நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார். இது உக்ரைன் தனது எதிர்கால அமெரிக்க முதலீடுகளையும், அதன் சொந்த பிரதேசத்தையும் மக்களையும் பாதுகாக்க அனுமதிக்கும் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், புதிய உக்ரேனிய கனிம ஒப்பந்தங்களுக்கு அமெரிக்காவிற்கு முன்னுரிமை அளிக்கும் மற்றும் உக்ரைனின் மறுகட்டமைப்பில் அமெரிக்க பெரும் முதலீட்டை முன்னெடுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |