போப் பிரான்சிஸின் புகைப்படத்தை வெளியிட்ட வத்திகான்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் புகைப்படத்தை வத்திகான் வெளியிட்டுள்ளது.
உடல்நிலையில் முன்னேற்றம்
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி, மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், வத்திக்கான் நிர்வாகம் போப் பிரான்சிஸின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் போப் பிரான்சிஸ் தேவாலயத்தின் பலிபீடத்திற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
அன்பான குழந்தைகளே நன்றி
மேலும், போப் பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையின் 10வது மாடியில் உள்ள போப் ஆண்டவர் குடியிருப்பில், ஏனைய பாதிரியார்களுடன் திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்றதாகவும் வத்திக்கான் தெரிவித்துள்ளது.
அதேபோல் மருத்துவமனைக்கு வந்த குழந்தைகள் குறித்து பேசிய போப் பிரான்சிஸ், "எனக்காக பல குழந்தைகள் ஜெபிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்களில் சிலர் இன்று ஜெமெல்லிக்கு வந்தனர். அன்பான குழந்தைகளே நன்றி, போப் உங்களை நேசிக்கிறார், உங்களை சந்திக்க எப்போதும் காத்திருக்கிறார்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |