Vattilappam: வாயில் வைத்ததும் கரையும் கருப்பட்டி வட்டிலப்பம் எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு தான் இந்த வட்டிலப்பம்.
கருப்பட்டி வைத்து செய்யப்படும் இந்த வட்டிலப்பம் வாயில் வைத்தவடன் அப்படியே கரைந்து போய்விடும்.
அந்தவகையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுவையான கருப்பட்டி வட்டிலப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி முட்டை- 4
- தேங்காய் பால்- ½ கப்
- சர்க்கரை- 1 ஸ்பூன்
- கருப்பட்டி- 1½ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின் அதில் தேங்காய் பால், சர்க்கரை, கருப்பட்டி, உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கருப்பட்டி கரையும்வரை நன்கு கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதற்குள் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து அந்த பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி போட்டு பின் இட்லி பாத்திரத்தை மூடி 30 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான வட்டிலப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |