இந்திய அணியிடம் வரலாற்று தோல்வி! பென் ஸ்டோக்ஸை கடுமையாக விளாசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள்
இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததற்கு, முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் கடுமையாக விளாசியுள்ளனர்.
படுதோல்வி
ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 434 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இது இந்திய அணி 147 ஆண்டுகளுக்கு பின் பெற்ற இமாலய வெற்றி ஆகும். இப்போட்டியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 மற்றும் 15 ஓட்டங்களே எடுத்தார்.
@AP
படுதோல்வியை சந்தித்ததால் கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் இதை கொண்டுவாருங்கள் ரிஷி சுனக்! நான் முழுமையாக ஆதரிக்கிறேன் - முன்னாள் கிரிக்கெட் வீரர்
குறிப்பாக முன்னாள் கேப்டன்களான நாசர் ஹுசைன், மைக்கேல் வாகன் இருவரும் இங்கிலாந்து 'Bazball' கிரிக்கெட்டை ஆடி தோற்றுள்ளது என விமர்சித்துள்ளனர்.
மைக்கேல் வாகன்
@File
மைக்கேல் வாகன் கூறுகையில், 'இது பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரின் கீழ் ஏற்பட்ட மிக மோசமான தோல்வியாகும். மேலும் அவர்களது முறையை அம்பலப்படுத்தியது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களால் ஆக்ரோஷமாக செயல்பட முடியாது. அவர்கள் தங்கள் தருணங்களைத் தேர்தெடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அதேபோல் நாசர் ஹுசைன், 'Bazball என்பது தாக்குதலைப் பற்றியது, ஆனால் அது அழுத்தத்தை ஊறவைப்பதும் ஆகும்' என Sky Sportsயில் கூறினார்.
மெக்கல்லம்
Bazball என்பது பிரெண்டன் மெக்கல்லத்தின் யுக்தியை குறிப்பதாகும். அதில் உள்ள Baz அவரது புனைப்பெயராகும்.
ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைலுக்கு பெயர் பெற்ற மெக்கல்லம், தனது பயிற்சியிலும் அதை பயன்படுத்துகிறார். ஆனால், அதைத் தான் தற்போது இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்கள் விமர்சித்துள்ளனர்.
@Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |